Monday, July 14, 2008

447. "தசா" குறித்து அம்மு & பாலா

நேற்று காலை (மனைவியின் அலுவலகத்திலிருந்து பெற்ற ஓசி டிக்கெட்டு வாயிலாக!) குடும்ப சகிதம் தசாவதாரம் காணும் பெரும்பேறு கிட்டியது.  தசா குறித்து ரெவ்யூ எழுதி ஜோதியில் (பரங்கிமலை அல்ல:))கலக்காவிட்டால், நாமெல்லாம் என்ன "மூத்த" பதிவர் என்று தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு. 
 
என் மகள் அம்மு, 'அப்பா, நான் விமர்சனம் எழுதினால் உங்க பிளாகிலே போடுவீங்களா?" என்று கேட்கவே, "ஆஹா, நீ ஒருத்தி தான் பாக்கி, எழுதிக் கொடு, போட்ருவோம்" என்றேன்.  அதே சமயம் (11 வயது) அம்மு எப்படி தமிழ் எழுதுகிறாள் என்று அறியும் ஆர்வமும் ஏற்பட்டது !!!  முதலில் அம்முவின் விமர்சனம், followed by mine.

அம்மு: தசாவதாரம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் மாஸ்டர் பீஸ் ஆகும். கமலின் 10 அவதாரங்களில் தான் படமே இருக்கிறது.  எனக்குப் பிடித்தது விஷ்ணுவின் தாசனாக அவதாரமெடுக்கும் ரங்கராஜ நம்பி.  எந்தத் தவறும் செய்யாத அவரை கோவிந்தராஜரின் சிலையோடு கட்டிப் போட்டு சமுத்திரத்தில் போடுகின்றனர்.  இந்த முதல் அவதாரத்திற்குப் பிறகு, போகப் போக நமக்குக் குழப்பம் ஏற்படுகிறது!

அசினுக்கு (கமலுக்கு 10 அவதாரங்கள் இருக்கும்போது!) படத்தில் 2 அழகான அவதாரங்களே உள்ளன.  இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் கதாநாயகன் கோவிந்த் என்றாலும், பல்ராம் நாயுடு பாத்திரம் தான் பெஸ்ட்.   கமல், ஜார்ஜ் புஷ்ஷாகவும், ஜப்பான்காரராகவும், ஒரு 95 வயது பாட்டியாகவும் கூட ஜமாய்த்திருக்கிறார்.  நாயுடுவும், கலீபுல்லாவும், பாட்டியும் சிரிப்பு மூட்டுகின்றனர்.

எனக்கு இப்படத்தின் பாடல்கள் பிடித்திருந்தன.  படத்தின் வில்லனான ஃபிளெட்சரும், ஜப்பான்கார கமலும் சண்டை போடும் காட்சி பார்ப்பவர் உள்ளத்தை கவரும் வண்ணம் அமைந்திருந்தது.  பல விறுவிறுப்பான திடீர் திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் ஆக வெற்றி பெறும் என்பது என் கருத்து.

அன்புடன்
அம்மு

பி.கு: எனது விமர்சனம் தனிப்பதிவாக, இன்று மாலை வெளிவரும்!

8 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

enRenRum-anbudan.BALA said...

Test !

said...

// enRenRum-anbudan.BALA said...
Test !

4:11 PM, July 14, 2008


enRenRum-anbudan.BALA said...
Test !

4:13 PM, July 14, 2008
//

இதெல்லாம் ஒரு பொழைப்பா

enRenRum-anbudan.BALA said...

அனானி,
டென்ஷன் ஆகாதீங்க:) Cool down !

தமிழ்மணத்துல முதலில் அப்டேட் ஆகவில்லை. அதனால் தான் 2 டெஸ்ட் பின்னூட்டங்கள் !

said...

அம்முவின் விமர்சனம் OK

-L-L-D-a-s-u said...

அம்முவுக்கு வாழ்த்துகள் .

ச.சங்கர் said...

பாலா

மதுவின் தெளிவான எழுத்து நடை என்னை ஆச்சரியப்படுத்தவில்லை:)

I know she is capable of more than this, Congratulations to her first posting in blog

enRenRum-anbudan.BALA said...

-L-L-D-a-s-u,
//
அம்முவுக்கு வாழ்த்துகள் .
//
அம்முவிடம் சொன்னேன். அவளை வாழ்த்திய முதல் பதிவர் நீங்கள் தான் என்பதையும் தான் :)

ச.சங்கர்,
நன்றி. அம்முவிடம் உனது அன்பான பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails